My Articles and Reflections
Here you will find my writings about Mental Health.
மனநலம் பற்றிய என் எழுத்துக்களை தொகுக்கும் பக்கம்
Welcome to Manathin Kural (மனதின் குரல்). This is the official Mental Health Blog in Tamil written by Dr. S. Avudaiappan, Professor and Psychiatrist.
-
மனநோய்கள் – ஒரு எளிய அறிமுகம்….
மனநோய்கள் – ஒரு எளிய அறிமுகம்…. “ஏதோ வேலைப்பாடு பண்ணிட்டாங்க””எல்லாம் Stress தான்”“Society மாறிடுச்சுல அதான் பிரச்சனை”“மூளையில ஏதோ பிராப்ளம்… Exacta காரணம் தெரியலை…” இவையெல்லாம் மனநோய் ஏன் வருகிறது என்ற கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில்கள். ஒவ்வொருவரின் படிப்புக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப பதில்கள் வந்தாலும் உண்மையான பதில் ஒருவருக்கும் தெரியவில்லை என்பதே…மன நோய் ஏன் ஏற்படுகிறது… ஒரே குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு மன நோய் ஏற்படுவதையும் மற்றொருவருக்கு ஏற்படாமல் இருப்பதையும் தீர்மானிப்பது எது?… 50 வருடங்களுக்கு முன்…
-
கம்பிகளும் தூண்களும்…
மனநோய் வந்தவர்களை சந்திக்கும் போது தவறாமல் கேட்கும் கேள்வி “உங்கள் குடும்பத்தில் யாருக்காவது மனநோய் உண்டா?” என்பதே. சில சமயம் ஆமென்று பதில் வரும். பல சமயங்களில் இல்லையென்று பதில் வரும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மனநோய் வந்தால் மற்றொருவருக்கும் வருமா… நவீன விஞ்ஞானம் இதற்கென்ன பதில் சொல்கிறது…. பொதுவாக விஞ்ஞானபூர்வமாக எந்த ஒரு நோயும் மரபுரீதியாக வருமென்று சொல்வதற்கு ஒரு கருமுட்டை இரட்டையர்களில் ஒருவருக்கு நோய் வந்தால் மற்றொருவருக்கு நோய் வரும் வாய்ப்பு எவ்வளவு என்பதே…
-
கவுன்சலிங் – உண்மையில் என்ன…
பலருக்கு மனநோய்க்கான வைத்தியம் என்றாலே அது கவுன்சலிங் தான். ஆனால் அதை ஒரு சர்வரோக நிவாரணிப் போல ஒரு கருத்தும் உள்ளது. அது சரியா? உண்மையில் கவுன்சலிங் என்ன செய்யும்? இந்த பதிவில் பார்ப்போம்…. தமிழர்களின் அகராதியில் மனநல வைத்தியம் என்பதற்கு கவுன்சலிங் என்று எங்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை. எங்கள் பிரிவுக்கு வரும்போது “கொஞ்ச நாளா ஒரு மாரி இருக்கான் சார்… கொஞ்சம் கவுன்சலிங் கொடுப்பீங்கன்னு கூடி வந்தோம்” என்று சொல்பவர்கள் நூற்றுக்கு தொண்ணூறு பேர்…
-
மனநலத்துறை – ஒரு அறிமுகம்
“நீங்க என்ன ஸ்பெஷலிஸ்ட் சார்?” “சைக்கியாட்ரிஸ்ட்ங்க” ஒரு நிமிடம் யோசிப்பார். “ஓ! நம்ம ஒண்ணு விட்ட மாமா பொண்ணு கூட உங்களை மாதிரிதான். சைக்காலஜிஸ்டு…” “சைக்காலஜிஸ்ட் இல்லைங்க சைக்கியாட்ரிஸ்ட்” “அதாங்க சொன்னேன். இந்த கவுன்சலிங் பண்ணுவீங்களே அதானே…” புதிதாக யாரையாவது நான் சந்தித்தால் தவறாமல் நடக்கும் டயலாக் இது. இவர்களுக்கு என்றில்லை. எந்த மருத்துவம் சார்ந்த பத்திரிகையை எடுத்தாலும் மனநல மருத்துவர் ஆலோசகராகும் ஒரு உதாரணமாவது காட்ட முடியும். உண்மையில் இவர்களுக்குள் என்ன வேறுபாடு என்று தெரிந்து…
-
மனநல மருந்துகள் – ஒரு கேள்வி பதில்…
மனநல மருந்துகள் என்றுமே சர்ச்சைக்குரியவை. பலருக்கு மன நல மருந்துகள் என்றால் அவை தூக்கமாத்திரைகள் மட்டுமே. ஆனால் இன்றைய மனநல மருத்துவத்தில் பல்வேறு பாதுகாப்பான, வீரியம் கொண்ட மருந்துகள் உள்ளன. வழக்கமாக என்னிடம் மனநல மருந்துகள் பற்றி கேட்கப்படும் கேள்வி பதில்களை தொகுத்துள்ளேன். 1. மனநல மருந்துகள் என்ன? அவை எப்படி செயல்படுகின்றன? மனநல பிரச்சினைகள் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினாலேயே ஏற்படுகிறது என்று ஏற்கனவே பார்த்தோம்.(பார்க்க : மனநோய்கள் – ஒரு எளிய அறிமுகம்…. ) இந்த மாற்றங்களை…
-
பக்க விளைவுகள் பயம் தேவையா
என்னைப் பார்க்க வருவதில் 90 சதவீதத்திற்கும் மேல் நான் மருந்து எழுதுமுன் கேட்கும் முதல் கேள்வி சார் இதுல சைட் எஃபெக்ட் எதுவும் வராதே? நவீன மருத்துவத்தில் மிகப்பெரிய பூச்சாண்டி உண்டு என்றால் அது பக்கவிளைவுகள்தான். சைட் எஃபெக்ட் என்ற வார்த்தையே பலருக்கு ஆழ்ந்த பயம் தரும் வார்த்தையாக உள்ளது மருந்துகளையும் அதன் விளைவுகளையும் பற்றிய புரிதல் இல்லாததால் பலரும் அவர்களுக்கு பயன் தரும் மருந்துகளை எடுக்கவேண்டிய காலத்திற்கு முன்னதாகவே நிறுத்தி விடுகின்றனர். பிரச்சனை தீவிரமடைந்து தேவையற்ற…
-
பக்க விளைவுகள் பயம் தேவையா – 2
டாக்டர்களில் பலருக்கு இந்த அனுபவம் உண்டு. ஏதாவது தொந்திரவுக்கு ஒரு ஊசி போட்டிருப்போம் அல்லது மாத்திரை தந்திருப்போம். அடுத்த நாள் உடனே ஒரு சம்பந்தமில்லாத அறிகுறியுடன் திரும்பி வருவார்கள். உதாரணமாக… “ஒரே கண்ணை கட்டிக்கிட்டு வருது…” “மொய மொயன்னு வருது…” “பக்ன்னு அடைச்ச மாதிரி இருக்கு…” பல சமயங்களில் மருத்துவ புத்தகங்களிலேயே கண்டுபிடிக்க முடியாத வகைகளில் கூட இந்த அறிகுறிகள் இருக்கும். மனநல துறையில் இது போன்ற Complaints மிகவும் சாதாரணம். இதற்கு என்ன டெஸ்ட் செய்தாலும்…
-
நல் தூக்க வழிமுறைகள்
தூக்கத்திற்கும் மனநல மருத்துவதிற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. மனநல மருத்துவர்களை நாடுபவர்கள் பலசமயம் தூக்கமின்மை என்ற நிலை வரும்போதே வருகின்றனர். மருந்துகள் எடுத்து தூக்கம் சரியாக விட்டால் அடுத்த நிமிடம் மருந்துகளை நிறுத்தி விடுகின்றனர். ஆக மொத்தத்தில் அவர்களை பொருத்தவரை மனநலம் என்பது தூக்கம் என்று அர்த்தம் கொள்கின்றனர். இது மிகவும் தவறான பார்வை. தூக்கம் மனநலப் பிரச்சினைகளின் அறிகுறிகளில் ஒன்று. ஆனால் அது மட்டுமே மனநலப் பிரச்சனை ஆகாது தூக்கமின்மை என்பதால் வியாதிகள் வருவதில்லை வியாதி…
