Online Consultation

Get Expert Psychiatric Care from the Comfort of Your Home

Welcome to the Online Consultation in Tamil by Manam Thiranthu Mental Health Centre. Dr. S. Avudaiappan offers secure, confidential video consultations for patients who cannot visit our clinic in person. This service is ideal for ongoing therapy, medication reviews, and CBT sessions.

Please note: This service is for non-emergency situations only. If you are experiencing a severe crisis, please visit your nearest hospital immediately.

How to Book:

  1. Read the terms and conditions below.
  2. Fill out the appointment request form at the bottom of the page.
  3. Our team will contact you to confirm your time slot and provide the video link.
Click here to read Terms & Conditions / விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Terms & Conditions / விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்


Introduction / முன்னுரை:
It is very important to get a doctor’s advice at the right time for any ailment. As many of our beneficiaries come from far away, coming in person during this period is costly and difficult. Therefore, this online consultation system has been introduced to reduce their difficulty.
எந்த ஒரு வியாதிக்கும் மருத்துவரின் ஆலோசனையை தக்க சமயத்தில் பெறுவது மிகவும் முக்கியமாகும். எங்களின் பயனாளிகள் பலர் வெகு தூரத்திலிருந்து வருவதால், நேரில் வருவது மிகுந்த பொருள் செலவையும் சிரமத்தையும் கொடுக்கிறது. ஆகவே அவர்களுக்கு சிரமத்தை குறைக்கும் வகையில் இந்த ஆன்லைன் கன்சல்டேஷன் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

1. Suitability / பொருத்தம்:
Online consultation means giving you medical advice via video, which may not be suitable for everyone. If the doctor decides that such advice is not appropriate for you, it would be beneficial for you to visit the hospital in person.
ஆன்லைன் கன்சல்டேஷன் என்பது வீடியோ மூலமாக உங்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குவது. இது எல்லோருக்கும் ஏற்புடையதாக இருக்காது. உங்களுக்கு இதுபோன்ற ஆலோசனை ஏற்புடையது அல்ல என்று மருத்துவர் தீர்மானிக்கும் பட்சத்தில், நீங்கள் மருத்துவமனையை நேரில் அணுகி மருத்துவரை பார்ப்பது சரியான பயன் தரும்.

2. Duration / கால அளவு:
The online consultation can take up to 15 minutes for a review consultation and 30 minutes for a New Consultation. At that time, you will be given necessary advice.
ஆன்லைன் கன்சல்டேஷன் என்பது மறு ஆலோசனைக்கு (Review) 15 நிமிடங்களும், புதிய ஆலோசனைக்கு (New Consultation) 30 நிமிடங்களும் நீடிக்கக் கூடியதாக இருக்கும். அந்த சமயத்தில் உங்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.

3. Recording / பதிவு செய்தல்:
These consultations will be recorded to ensure compliance with the code of conduct and to assist in responding to complaints later. These will not be shared with anyone. If you do not wish to be recorded, please let us know in advance.
இந்த ஆலோசனைகள் ஒழுக்க விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை உறுதி செய்யவும், பிற்காலத்தில் அது சார்ந்த புகார்களுக்கு பதில் அளிக்கவும் உதவும் வகையில் பதிவு செய்யப்படும். இவை யாருடனும் பகிரப்படாது. ஒருவேளை உங்களுக்கு இவ்வாறு பதிவு செய்யப்படுவது விருப்பமில்லை எனில் முதலிலேயே தெரிவித்து விடவேண்டும்.

4. Family Presence / குடும்பத்தினர் இருப்பு:
Having your family member or significant other with you will enhance the quality of service. Beneficiaries under the age of 18 must be accompanied by their parents.
உங்களுடைய குடும்ப நபரோ அல்லது உங்களுடைய முக்கியமான நபரோ உங்களுடன் இருப்பது சேவையின் தரத்தை உயர்த்தும். 18 வயதுக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு அவர்களுடன் அவர்களின் பெற்றோர் இருப்பது அவசியம்.

5. Emergency Contact / அவசர தொடர்பு:
If you are in danger to your life or property, or if you are a danger to others, your family member or significant other will be contacted.
உங்களால் உங்களின் உயிருக்கோ அல்லது உடமைக்கோ ஆபத்து இருக்கும் பட்சத்தில், அல்லது உங்களால் பிறரது உயிருக்கோ அல்லது உடமைக்கோ ஆபத்து இருக்கும் பட்சத்தில் உங்கள் குடும்ப நபர் அல்லது உங்களின் முக்கிய நபர் யாரோ அவர்களுடன் தொடர்பு கொள்ளப்படும்.

6. NOT FOR EMERGENCIES / அவசர சிகிச்சைக்கு அல்ல:

Online consultation is not for urgent needs. Brain problems caused by heavy drinking, withdrawal problems, serious suicidal thoughts, or harmful actions to family and others are not to be solved by online consultation. For these, you must consult a doctor directly. If you approach this center for such reasons, appearing in person is necessary. Online consultation will not be offered for such reasons under any circumstances.
ஆன்லைன் கன்சல்டேஷன் முறை அவசரத்தேவைகளுக்கான முறையல்ல. அதிகபட்சமான குடியினால் ஏற்படும் மூளை சார்ந்த பிரச்சினைகள், குடியை நிறுத்துவதினால் வரும் பிரச்சினைகள், தீவிர தற்கொலை எண்ணங்கள், குடும்பத்திற்கும் மற்றவர்களுக்கும் சேதம் விளைவிக்கும் நடவடிக்கைகள் போன்றவை ஆன்லைன் கன்சல்டேஷன் முறையினால் தீர்க்கப்பட வேண்டியவை அல்ல. இவற்றுக்கு நீங்கள் நேரடியாக மருத்துவரை அணுகுவதே தீர்வாகும். ஒருவேளை இவை சார்ந்த காரணங்களுக்காக நீங்கள் இந்த மனநல மருத்துவ மையத்தை அணுகி இருந்தால் நேரில் வருவது அவசியம். எந்த காரணம் கொண்டும் இதுபோன்ற காரணங்களுக்காக ஆன்லைன் கன்சல்டேஷன் வழங்கப்படாது.

7. Physical Emergencies / உடல் சார்ந்த அவசரங்கள்:
If there is a medical emergency regarding physical health, consult the nearest doctor. If they have doubts about our medicine, they can freely contact us, and we are ready to help.
ஒருவேளை உங்களுக்கு உடல் ரீதியான மருத்துவ அவசர சிகிச்சை தேவைப்படுவது என்றால் அதற்கு அருகிலுள்ள மருத்துவரை அணுகவும். ஒருவேளை அவருக்கு எங்களின் மருந்து பற்றிய சந்தேகம் இருந்தால் அவர் எங்களை தாராளமாக தொடர்பு கொள்ளலாம்; அதற்கு அவர்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.

8. Honesty / உண்மைத்தன்மை:
The doctor should be given correct information. Neither the doctor nor the management shall be responsible for the consequences of furnishing false information.
மருத்துவரிடம் உண்மையான தகவல்களையே அளிக்க வேண்டும். தவறான தகவல்கள் அளிக்கும் பட்சத்தில் ஏற்படும் விளைவுகளுக்கு மருத்துவரோ நிர்வாகமோ பொறுப்பாகாது.

9. Medical History / மருத்துவ வரலாறு:
You should share with us any other medical concerns you may have and tell your doctor about medications you are taking.
உங்களுக்கு இருக்கும் பிற மருத்துவ தொந்தரவுகளை பற்றிய குறிப்புகளை எங்களுக்கு முதலிலேயே பகிர வேண்டும். நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளை பற்றிய விவரங்களை மருத்துவரிடம் மறைக்காமல் கூறவேண்டும்.

10. Other Treatments / பிற சிகிச்சைகள்:
You must follow the treatment you are taking for your physical condition; we will not treat it. You should inform your other doctors about medications we prescribe. We are not responsible for side effects occurring without such disclosure.
உங்களின் உடல் சார்ந்த உபாதைகளுக்கு நீங்கள் எடுக்கும் சிகிச்சையினை பின்பற்ற வேண்டும்; நாங்கள் அதற்கு சிகிச்சை அளிக்க மாட்டோம். உங்கள் சிகிச்சை விவரங்களை எங்களுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும். அதேபோல் நாங்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையும் நீங்கள் உங்களின் மருத்துவருக்கு தெரிவிக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு தெரிவிக்காமல் வரும் பக்கவிளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பாளியாக மாட்டோம்.

11. Pregnancy / கர்ப்பம்:
You must notify us immediately if you become pregnant.
நீங்கள் கருத்தரிக்கும் பட்சத்தில் எங்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

12. Withdrawal / விலகுதல்:
You have the full right to withdraw from this service at any time without giving any reason. Such withdrawal will not affect regular services provided to you in person.
உங்களுக்கு எந்த நேரத்திலும் இந்த சேவையிலிருந்து காரணம் ஏதும் தெரிவிக்காமல் விலக முழு உரிமை உண்டு. அவ்வாறு விலகுதல், உங்களுக்கு வழங்கப்படும் வழக்கமான சேவைகளை எந்த விதத்திலும் பாதிக்காது.

13. Discomfort / அசௌகரியம்:
Online consultation may make some people nervous. If you feel any discomfort, you can withdraw immediately.
ஆன்லைன் கன்சல்டேஷன் முறையில் சிலருக்கு பதட்டம் ஏற்பட வாய்ப்படு. அவ்வாறு உங்களுக்கு ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக இதிலிருந்து விலகலாம்.

14. Prescriptions / மருந்துகள்:
Medicines should be taken only for the duration specified in the prescription. Do not use the prescription for longer than prescribed. The doctor is not responsible for side effects of doing so. If you need an extension, approach us in person.
மருந்து சீட்டில் குறிப்பிட்டுள்ள காலம் மட்டுமே மருந்துகள் உட்கொள்ள வேண்டும். மருந்து சீட்டை மருத்துவர் பரிந்துரைத்த காலம் தாண்டி பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு மருத்துவர் பொறுப்பல்ல. மருந்து சீட்டு தேவைப்படும் பட்சத்தில் நேரில் அணுகி பெற வேண்டும்.

15. Presence of Patient / நோயாளி இருப்பு:
Medical advice cannot be given without a patient for any reason. This is entirely a voluntary service.
எக்காரணம் கொண்டும் நோயாளி இல்லாமல் மருத்துவ ஆலோசனை தர இயலாது. இது முற்றிலும் உங்கள் விருப்பத்திற்குட்பட்ட சேவையே.

16. Privacy & Tech / தனியுரிமை மற்றும் தொழில்நுட்பம்:
We make every effort to keep your personal information secure. However, we will not be held responsible for communication network faults.
உங்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க எங்களின் தரப்பு முழு முயற்சி செய்யும். ஆனால் தகவல் தொடர்பு நிறுவனங்களின் தவறால் ஏதேனும் கோளாறு நிகழ்ந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.

17. Technical Glitch / தொழில்நுட்ப கோளாறு:
In case of any technical glitch during online consultation, the date will be given once again. If the problem persists, your money will be refunded. You should then consult a doctor in person.
ஆன்லைன் கன்சல்டேஷன் நிகழும் போது ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிப்பு ஏற்பட்டால், மீண்டும் ஒருமுறை தேதி தரப்படும். கோளாறு தொடர்ந்தால் உங்களின் பணம் வாபஸ் தரப்படும். நீங்கள் மருத்துவரை நேரில் அணுகியே கலந்தாலோசிக்க வேண்டும்.

18. Refunds & Cancellation / ரத்து செய்தல் மற்றும் திரும்பப் பெறுதல்:
Do not miss your appointment time. If you need to change the date/time, notify us at least 24 hours in advance. If you miss the appointment without prior notice, fees will not be refunded.
அப்பாயிண்மென்ட் தரப்பட்ட நேரத்தை தவற விட வேண்டாம். உங்களுக்கு நாள் மற்றும் தேதியில் மாற்றம் தேவை என்றால் குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன் தெரிவிக்க வேண்டும். முன்னறிவிப்பின்றி அப்பாயிண்மென்ட் தவற விட்டால், உங்களின் பணம் வாபஸ் தர இயலாது.


Consent / ஒப்புதல்:
By clicking “I Agree” below, I confirm that I have read and understood the above terms and conditions, including the limitations regarding emergency services.
கீழே உள்ள “சம்மதம்” என்பதை கிளிக் செய்வதன் மூலம், மேலே உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை (அவசர சேவைகள் தொடர்பான வரம்புகள் உட்பட) நான் முழுமையாகப் படித்து புரிந்து கொண்டேன் என்று உறுதி கூறுகிறேன்.